என்ன ஆட்டம் இது! இலங்கையின் வெற்றியைப் பார்த்து மிரண்ட லசித் மலிங்கா
இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டி குறித்து லசித் மலிங்கா சிலாகித்து ட்வீட் செய்தார்.
இலங்கை அபார வெற்றி
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை முன்னேறியது.
ஆப்கானிஸ்தான் அணியினர் சோகத்துடன் தொடரை விட்டு வெளியேறினர். இந்த நிலையில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டி குறித்து இலங்கையின் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் லசித் மலிங்கா மிரண்டு ட்வீட் செய்துள்ளார்.
AP Photo/K.M. Chaudary
மலிங்காவின் வாழ்த்து
அவரது பதிவில், 'என்னவொரு போட்டி! இரு அணிகளையும் நாம் பிரித்து பார்க்க முடியவில்லை, ஆனால் இலங்கை சூப்பர் 4க்கு வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். வரவிருக்கும் ஆட்டங்களில் நமது சிறப்பான செயல்திறன்களுடன் நாம் இன்னும் முன்னோக்கி செல்ல வேண்டும்.
மெண்டிஸின் சிறந்த ஆட்டத்திற்கும், இளம் வீரர் வெல்லாலகேவின் மிரட்டலான ஆட்டத்திற்கும் வாழ்த்துக்கள். அதிர்ஷ்டம் கடினமாக இருந்தாலும் சிறப்பாக விளையாடியிருக்கிறீர்கள்' என தெரிவித்துள்ளார்.
AP Photo
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |