ஆசியக்கோப்பையில் புதிய உலக சாதனை படைத்து..கெத்தாக அடுத்த சுற்றுக்கு நுழைந்த இலங்கை
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறியது.
குசால் மெண்டிஸ் அரைசதம்
லாகூரில் நேற்று நடந்த ஆசியக்கோப்பை போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி 291 ஓட்டங்கள் குவித்தது.
குசால் மெண்டிஸ் 84 பந்துகளில் 92 ஓட்டங்கள் விளாசினார். பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 37.4 ஓவர்களில் 289 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
@ACC
மொஹம்மது நபி 65 (32) ஓட்டங்களும், ஷஹிடி 59 (66) ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கை அணியின் தரப்பில் கசுன் ரஜிதா 4 விக்கெட்டுகளும், துனித் வெல்லாலகே மற்றும் தனஞ்செய டி சில்வா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
AP
இலங்கை அணி சாதனை
ஆப்கான் அணி ஆல்அவுட் ஆனதால், இலங்கை அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்வியால் ஆப்கானிஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறியது.
ICC/X
குசால் மெண்டிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இலங்கை அணி தொடர்ச்சியாக 12வது ஒருநாள் போட்டியில் எதிரணியை ஆல்அவுட் செய்து உலக சாதனை படைத்துள்ளது.
இலங்கைக்கு அடுத்த இடத்தில் அவுஸ்திரேலியா (10), தென் ஆப்பிரிக்கா (10), பாகிஸ்தான் (9) அணிகள் உள்ளன.
Sri Lanka's record streak continues! ?
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) September 5, 2023
?? Setting a new world record with 12 successive games of dismissing our opponents in ODIs! #LankanLions pic.twitter.com/L6WDel8Yry
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |