இவர்கள் எங்கே சென்றார்கள்? மம்தா பானா்ஜி பதவியை ராஜினாமா செய்யணும்: குஷ்பு ஆவேசம்
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் விவகாரத்தில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்று குஷ்பு ஆவேசமாக பேசியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கா் என்ற அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த வாரம் இரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அவர், மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை மீட்டு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த கொலையை கண்டித்து மருத்துவ மாணவா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்று குஷ்பு ஆவேசமாக பேசியுள்ளார்.
அவர் பேசியது
சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவ மாணவியை வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர்.
3 மணிநேரம் கழித்து தான் பெண்ணின் உடலை பெற்றோருக்கு காட்டியுள்ளனர். அப்போது அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்ததை பார்த்து தான், தனது மகள் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு பிறகு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானா்ஜி தன்னை ஒரு பெண் என கூற தகுதி உள்ளதா? பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறேன் என அவரால் கூற முடியுமா?
மேலும், கூட்டணி என்பதால் கனிமொழி, பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் வாய் திறக்காமல் இருக்கின்றனர். எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் பிரியங்கா, கனிமொழி எங்கே சென்றார்கள்?" என்று ஆவேசமாக பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |