அமெரிக்காவில் காதலியை கொன்று அவரது உடலுடன் ஏழு மாதங்கள் ஒரே வீட்டில் வாழ்ந்த நபர்
அமெரிக்காவில் வீடு ஒன்றிலிருந்து நீண்ட நாட்களாக துர்நாற்றம் வீசிய நிலையில், அது இறந்த ஒரு விலங்கின் உடலிலிருந்து வீசுவதாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் எண்ணிவந்துள்ளார்கள்.
ஆனால், அது ஒரு பெண்ணின் உடலிலிருந்து வீசிய துர்நாற்றம் என்பது பின்னர் தெரியவந்துள்ளது.
மிச்சிகனிலுள்ள வீடு ஒன்றில் வாழ்ந்து வந்த Matthew Lewinski மற்றும் அவரது காதலி Jerri Wintersக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, Matthew தன் காதலி Jerriயை கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார்.
காதலியின் உடலை தரை தளத்தில் ஒரு இடத்தில் போட்டுவிட்டு அந்த வீட்டிலேயே ஏழு மாதங்கள் வாழ்ந்துவந்துள்ளார் Matthew.
அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் அந்த பகுதியில் நீண்ட நாட்களாக ஒரு துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தாலும், அது ஏதோ ஒரு இறந்த விலங்கின் உடலிலிருந்து வீசுவதாக எண்ணிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
ஆனால், ஒருநாள் Matthewவின் சகோதரி அவரது வீட்டின் தரைதளத்தில் தார்பாய் ஒன்றின்மீது ஒரு உடல் கிடப்பதைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
பொலிஸ் விசாரணையில், தான் தன் காதலியைக் கழுத்தை நெறித்துக் கொன்று, அவரது உடலை தன் வீட்டு தரைதளத்தில் போட்டுவிட்டதை ஒப்புக்கொண்டார் Matthew.
Matthew கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது திட்டமிட்ட கொலை, உயிரற்ற உடலுக்கு ஊறு விளைவித்தல், கொலையை மறைத்தல் முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.