ISILயில் இணைந்தவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த பிரித்தானியா
பயங்கரவாதத்திற்காக நிதி திரட்டியதற்காக ISIL உறுப்பினருக்கு பிரித்தானியா 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
8 ஆண்டுகள் சிறை
ஐன் டேவிஸ் (Aine Davis) என்ற 39 வயது நபர், சிரியாவில் ISIL (ISIS) அமைப்பில் இணைந்ததுடன் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டார்.
அவர் பயங்கரவாத துப்பாக்கி வைத்திருந்தமை மற்றும் நிதி திரட்டிய குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
பயங்கரவாத நடவடிக்கைக்கு நிதி
வழக்கை விசாரித்த லண்டனின் ஓல்ட் பெய்லி நீதிபதி மார்க் லூகிராஃப்ட், துப்பாக்கி வைத்திருந்ததற்காக டேவிஸுக்கு 6 ஆண்டுகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்ததற்காக 2 ஆண்டுகள் சிறை என அறிவித்தார்.
இதுகுறித்து காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவரான கமாண்டர் டொமினிக் மர்பி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'டேவிஸ், சிரியாவிற்கு சென்று சேர்வதற்காக பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி அளிப்பதற்காக பிரித்தானியாவில் இருந்து பெருமளவிலான பணத்தை கடத்தி வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அவர் இந்தக் குற்றங்களை செய்து ஏறக்குறைய 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. எவ்வளவு காலம் கடந்தாலும் நாங்கள் இடைவிடாமல் தொடர்வோம். பிரித்தானியாவிலும், வெளிநாட்டிலும் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட எவரையும் தண்டிக்க முயற்சிப்போம் என்ற செய்தியை இந்த வழக்கு அனுப்பும் என்று நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |