பிரித்தானியாவில் பாதசாரிகள் மீது பாய்ந்த கார்: கிறிஸ்துமஸ் காலையில் அரங்கேறிய சோகம்
கிறிஸ்துமஸ் தினத்தின் காலையில் லண்டன் மேற்குப் பகுதியில் நடந்த அச்சுறுத்தும் சம்பவத்திற்கு பின்னர் ஒருவர் பொலிஸ் காவலில் உள்ளார்.
ஷாஃப்ட்ஸ்பரி அவென்யூவில்(Shaftesbury Avenue) கார் ஒன்று நடைப்பாதை மீது ஏறிய விபத்து ஏற்படுத்தியதில் 4 பேர் வரை காயமடைந்தனர்.
இதில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது, மற்றவர்களின் நிலை உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என்று மெட்ரோபொலிட்டன் பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் காவல்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கார் நடைபாதையில் ஏறுவதற்கு முன்பு இரவு விடுதியில் சந்தேக நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்த தகவல்கள் ஏதேனும் தெரிந்தவர்கள் முன்வந்து விசாரணையில் உதவ வேண்டும் என்று மெட்ரோபொலிட்டன் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை பகிர்ந்த இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி: அழகிய குழந்தைகளுடன் வெளியான புகைப்படம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |