38 பேரை கொன்று தின்ற நபர் கைது
Man accused of killing and eating 38 people arrested: 38 பேரை கொன்று தின்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உகாண்டா நாட்டின் வரலாற்றில் மோசமான சீரியல் கில்லர் என அறியப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
38 பேரை கொன்று தின்ற நபர்
முஜூரிஸி மோசஸ் என்னும் நபர், 15 ஆண்டுகளில் 38 பேரைக் கொலை செய்து அவர்கள் உடலைத் தின்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மோசஸ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக உகாண்டா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2010ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மோசஸ் 38 பேரைக் கொலை செய்து அவர்கள் உடலைத் தின்றதாகத் தெரிவித்துள்ள உகாண்டா ராணுவத் தளபதியான ஜெனரல் கைனெருகாபா, மோசஸ் பொதுமக்கள் முன்னிலையில் விசாரணைக்குட்படுத்தப்படுவார் என்றும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மோசஸ், சில வீடுகளை உடைத்து உள்ளே நுழைந்து மொத்தக் குடும்பத்தையும் கொன்றுள்ளார் சிலரை, காதலிப்பதாக ஏமாற்றிக் கொன்றுள்ளார்.
குறிப்பாக, பாதிரியாரான ஸ்டீவன் முகாம்பே என்பவரது வீட்டில் துளையிட்டு, உள்ளே நுழைந்து அந்த வீட்டிலிருந்த அனைவரையும் மோசஸ் கொடூரமாகக் கொன்ற விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.