அவுஸ்திரேலிய விமான நிலையத்தில் 62 வயது முதியவர் அதிரடி கைது! சூட்கேசில் சிக்கிய பொருள்
அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் விமான நிலையத்தில் 62 வயது நபர் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
62 வயது முதியவர்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்கு 62 வயது முதியவர் ஒருவர் பயணித்தார்.
அவர் பிரிஸ்பேன் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அவுஸ்திரேலிய எல்லைப்படை (ABF) அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அவருடைய உடைமைகளை சோதனை செய்தபோது, வெள்ளை படிகப் பொருள் நிரப்பப்பட்ட 12 வெற்றிட-சீல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அவை மெத்தம்பேட்டமைன் பொருள் என்று தெரிய வந்தது. ஆரம்ப சோதனையில் மொத்தப் பறிமுதல் 17,500 street-level டீல்களாக பிரிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதன் மதிப்பு 11.4 மில்லியன் டொலர்கள் என்றும் அதிகாரிகள் கூறினர்.
அதிகபட்சமாக ஆயுள்
உடனடியாக அவுஸ்திரேலிய கூட்டாட்சி அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டார். அவர் மீது எல்லைக் கட்டுப்பாட்டு மருந்தின் வணிக அளவிலான அளவை இறக்குமதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
இதுகுறித்து AFP அதிகாரி ஷேன் ஸ்காட் (Shane Scott) கூறுகையில், "நாட்டிற்குள் வரும் சட்டவிரோத போதைப்பொருட்களை குறிவைக்க, விமான நிலையங்களில் உள்ள எங்கள் எல்லைகள் AFP மற்றும் ABFயில் தீவிரமாகவும், விடாமுயற்சியுடனும் ரோந்து செய்யப்படுகின்றன. இந்த பறிமுதல் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் பைகளுக்கு மில்லியன் கணக்கான டொலர்கள் செல்வதைத் தடுத்து நிறுத்தியுள்ளது" என்றார்.
மேலும், சட்டவிரோத போதைப்பொருட்களில் இருந்து அவுஸ்திரேலியர்களைப் பாதுகாக்கும் எங்கள் பணியில் AFP மற்றும் எங்கள் சட்ட அமலாக்க கூட்டாளிகள் உறுதியாக உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |