முதுகில் மசாஜ் செய்து கொண்ட இளம்பெண்! அதிக நேரம் ஆனதால் திரும்பி பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி... கைதான இளைஞன்
அமெரிக்காவில் மசாஜ் செய்து கொள்ள வந்த பெண்ணிடம் அருவருப்பான முறையில் நடந்து கொண்டு பாலியல் தாக்குதல் நடத்திய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்பிரிங்டேலை சேர்ந்தவர் டாமினிக் வில்லியம்ஸ் (30). இவர் மசாஜ் தெரபி தரும் கிளினிக்கில் வேலை செய்து வந்தார்.
அங்கு நேற்று இளம்பெண்ணொருவர் மசாஜ் செய்து கொள்ள வந்தார். அப்போது அவர் மேலாடையை கழட்ட சொன்ன டாமினிக் அவர் முதுகில் கை வைத்து மசாஜ் செய்தார்.
மசாஜ் செய்யும் நேரம் 20 நிமிடங்கள் என்ற நிலையில் அதை தாண்டி நேரம் சென்றதால் அப்பெண்ணுக்கு சந்தேகம் வந்து திரும்பி பார்த்தார். அப்போது அருவருப்பான செயலில் ஈடுபட்டு பாலியல் தாக்குதலில் டாமினிக் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார் அப்பெண்.
இது குறித்து அவர் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் டாமினிக்கை கைது செய்தனர்.
அவர் மீது சில முக்கிய பிரிவுகளின் கிழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, கைது செய்யப்பட்ட டாமினிக் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என தெரியவந்துள்ளது.