அவுஸ்திரேலியாவில் பைக் லாக்கருக்குள் கேட்ட சத்தம்: உடைத்த தீயணைப்பு படை..கைதான நபர்
அவுஸ்திரேலியாவில் ரயில் நிலையத்தில் இரண்டு நாய்கள் இறப்பதற்கு காரணமாக இருந்ததாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நாய்கள் குரைக்கும் சத்தம்
பென்ரித் ரயில் நிலையத்தில் பைக் உலோக லாக்கருக்குள் இருந்து நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது.
இதனை கவனித்த ஒருவர் NSW காவல்துறையினரை அழைத்துள்ளார். 
பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்பு NSW அதிகாரிகளின் உதவியுடன் அதனை உடைத்தனர். அப்போது உள்ளே இரண்டு க்ரேஹவுண்ட் வகை நாய்கள் இருந்துள்ளன.
அதில் ஒன்று ஏற்கனவே இறந்துவிட்டிருந்தது. மற்றொன்று கடுமையான வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது.
துரதிர்ஷ்டவசமாக இறப்பு
உடனே அந்த நாய் கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அங்கு இறந்தது.
இதுதொடர்பில் குற்றச்சாட்டப்பட்ட 57 வயதான சாண்டி நோரி என்ற நபர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 10 விலங்கு கொடுமை குற்றங்கள் சுமத்தப்பட்டன.
மேலும், உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜரான அவருக்கு பிணை மறுக்கப்பட்டது. அவர் 27ஆம் திகதி அடுத்ததாக மீண்டும் ஆஜராவார் என்று கூறப்பட்டுள்ளது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |