பெண் மருத்துவ ஊழியரை தவறாக தொட்டதாக கைது செய்யப்பட்ட நபர்: சிசிடிவி கமெராவில் தெரியவந்த உண்மை
நியூயார்க்கில், அவசர மருத்துவ பெண் ஊழியர் ஒருவரை ஏமாற்றி தவறாக தொட்டதாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் கைதும் செய்யப்பட்டார்.
Aaron Cervantes Mejia (52) என்பவர் சாலையைக் கடக்கும்போது நடு ரோட்டில் திடீரென கீழே விழுந்தார். அப்பகுதியில் இருந்த அவசர மருத்துவ ஊழியரான 32 வயது பெண் ஒருவர், அவரது உதவிக்கு வந்தார்.
அப்போது, அவரது உடலின் அந்தரங்க பாகங்களை அவர் தொட்டதாக கூறி அந்த பெண் புகாரளித்தார்.ஆகவே, பொலிசார் Aaronஐக் கைது செய்தனர்.
ஆனால், நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட CCTV கமெரா காட்சிகள் திரையிடப்பட்டபோது, Aaronக்கு வலிப்பு வந்து அவர் கீழே விழும் காட்சிகள் தெரியவந்தன.
அத்துடன், ஏற்கனவே Aaronக்கு வலிப்பு நோய் உண்டு என்றும், அப்போது அவரது கை கால்கள் அவரது கட்டுப்பாட்டில் இருக்காது என்பதும் சாட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
ஆகவே, அவர் வேண்டுமென்றே அந்த பெண்ணை தொடவும் இல்லை, ஏமாற்றவும் இல்லை என்று கூறியுள்ள நீதிமன்றம், வழக்கிலிருந்து Aaronஐ விடுவித்துள்ளது.