இலங்கையில் அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்த நபர்: கைது செய்த பொலிஸார்
இலங்கையில் முறையான அனுமதி பத்திரம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த நபர்
இலங்கையில் சிலாபம் - காக்கப்பள்ளிய பகுதியில் முறையான அனுமதி பத்திரம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து அனுமதி பத்திரம் இல்லாத துப்பாக்கி, 3 தோட்டாக்கள், 202 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் வரி இன்றி கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கூடுதல் விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் இது குறித்த கூடுதல் விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |