உலகின் விலையுயர்ந்த விசா கொண்ட நாடு எது தெரியுமா? சுற்றுலா பயணிகளே உஷார்
உலகின் பல்வேறு நாடுகள் இ- விசா நடைமுறைகள், நிலையான கட்டணங்கள், விசா இல்லாத பயணங்கள் என மிகவும் எளிமையான விசா நடைமுறைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் போது ஆசிய நிலப்பரப்பின் ஒரு அங்கமான பூடான் மட்டும் வித்தியாசமான நடைமுறை கடைபிடித்து வருகிறது.
அதாவது “உயர்மதிப்புமிக்க சுற்றுலாவுக்காக வடிவமைக்கப்பட்ட பயண மாதிரியுடன்” பூடானின் விசா அணுகுமுறையை உலகின் விலையுயர்ந்த விசா அணுகுமுறையாக மாற்றியுள்ளது.

சரியான வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், அதிகமான பயண கட்டணத்தை பூடான் கொண்டுள்ளது என்பதாகும்.
நிலையான மேம்பாட்டு கட்டணம்(SDF)
பிற நாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுபவர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் நாட்டை பொறுத்து, அவர்களது விமான டிக்கெட் ஆனது பயணச்செலவில் பெரும் பகுதியை எடுத்துக் கொள்ளும்.
ஆனால் பூடானில் விமான டிக்கெட் ஒருபுறம் இருந்தாலும், அந்த நாட்டுக்குள் நுழைவதற்கான கட்டணமே மிக அதிகமாகும்.
இதற்கு முக்கிய காரணம், பூடான் தனது சுற்றுலாவை நிலையான மேம்பாட்டு கட்டணத்தை(Sustainable Development Fee-SDF) மையமாகக்கொண்டு அமைந்து இருப்பதே ஆகும்.

விலையுயர்ந்த கட்டண சுற்றுலா
இந்தியா, பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளை சேர்ந்த குடிமக்களை தவிர, பெரும்பாலான பிற நாடுகளை சேர்ந்த குடிமக்கள் பூடானிற்குள் நுழைய வேண்டும் என்றால் நிலையான மேம்பாட்டு கட்டணத்தை-SDF செலுத்தியாக வேண்டும்.
அதன்படி, பூடானில் சுற்றுலா செல்ல விரும்புவர்களுக்கு ஒரு இரவுக்கு சுமார் USD 100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டணமானது USD 200 என்ற தொகையில் இருந்து சமீபத்தில் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இரவுக்கு ஒரு நபருக்கு சுற்றுலா நுழைவு கட்டணம் USD 100 என்பது தங்குமிடம், உணவு போன்ற வழக்கமான பயணச் செலவுகளை விட அதிகமாகும்.
இதுவே பூடானுக்கு சுற்றுலா செல்வதை உலகிலேயே மிகவும் செலவு மிக்கதாக ஆக்குகிறது.
இந்த நிலையான மேம்பாட்டுக் கட்டணம் மூலம் வசூலிக்கப்படும் தொகையானது நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், நிலையான எதிர்காலத்தை உறுதி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த அதிகப்படியான கட்டண நடைமுறை, வெகுஜன சுற்றுலா நடைமுறைகளால் ஏற்படும் பாதிப்புகளின் தாக்கங்களை குறைக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |