சுவிஸ் பொலிஸிடம் வசமாக சிக்கிய சந்தேக நபர்: சூட்கேஸில் இருந்த பொருட்கள்
நூற்றுக்கணக்கான செல்போன்களை இத்தாலிக்கு கடத்த முயன்ற நபரை சுவிஸ் பொலிஸார் கைது செய்தனர்.
சூட்கேசில் தனித்தனியாக
சுவிட்சர்லாந்தின் நபர் ஒருவர் சூரிச்சில் இருந்து மிலன் நகருக்கு ரயிலில் பயணித்தார். அவர் வைத்திருந்த சூட்கேசில் தனித்தனியாக படலத்தில் சுற்றப்பட்ட நூற்றுக்கணக்கான செல்போன்களை சுவிஸ் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
அவற்றில் 71 ஐபோன்கள் மற்றும் 29 சாம்சங் சாதனங்கள் அடங்கும். பின்னர் அவர் Chiassoவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில் சந்தேக நபர் 40 வயதுடையவர் என்றும், அவர் ருமேனியாவைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.
புள்ளிவிவரங்கள்
சூரிச்சின் Street Parade இசை விழாவின்போது இந்த செல்போன்கள் அனைத்தும் திருடப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும், அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்துக்கு மன நல பாதிப்பு: வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி காட்டம்
சமீபத்திய மாதங்களில் பிரித்தானியா உட்பட ஐரோப்பா முழுவதும் செல்போன் திருட்டு அதிகரித்துள்ள நிலையில், தற்போது சுவிஸில் இந்த நபர் பிடிபட்டுள்ளார்.
லண்டனில் ஒவ்வொரு 6 நிமிடத்திற்கும் ஒரு மொபைல் போன் திருடப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டில் மட்டும் தலைநகரில் 52,000 சாதனங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |