மனைவியை காணவில்லை என புகாரளித்த நபர்..விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை
இந்திய மாநிலம் ஜார்கண்டில் மனைவியை கொன்று புதைத்த நபர் கைது செய்யப்பட்டார்.
மாயமான மனைவி
ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தைச் சேர்ந்த மனிஷ் பரன்வால் என்ற நபர் கடந்த டிசம்பர் மாதம் தன் மனைவியை காணவில்லை என்று பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடந்தி வந்தனர். இந்த நிலையில் புகார் அளித்த மனிஷ் தன் மனைவியை கொலை செய்தது தெரிய வந்தது.
மனைவியை கொலை செய்த அந்த நபர், தனது நண்பரின் வீட்டில் புதைத்துள்ளார். பொலிஸார் அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை அவர் ஒப்புக் கொண்டார்.
பெண்ணின் உடல் மீட்பு
அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த பெண்ணின் உடல் பாகங்களை மீட்டனர். மனீஷ் கைது செய்யப்பட்டார்.
பெண்ணின் உடல் பாகங்களை டிஎன்ஏ பரிசோதனை அனுப்ப உள்ளதாகவும், மேலும் கொலையில் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
@APRN