நள்ளிரவில் ஐஸ்கிரீம் கடைக்குள் வந்த இளைஞன்! உள்ளிருந்த 28 வயது பெண் ஊழியரிடம் நடந்து கொண்ட விதம்... பதைபதைக்கும் சிசிடிவி காட்சி
அமெரிக்காவில் நள்ளிரவில் ஐஸ் கிரீம் கடைக்குள் புகுந்து அங்கிருந்த பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபர் தொடர்பான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
நியூ யோர்கின் மேன்ஹாட்டனில் தான் இச்சம்பவம் கடந்த 20ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் நடந்துள்ளது.
அங்குள்ள ஐஸ் கிரீம் கடைக்குள் ஆண் ஒருவர் நுழைந்தார், பின்னர் 28 வயதான பெண் ஊழியரை கட்டி பிடிக்க முயன்று பாலியல் தாக்குதல் நடத்தினார்.
இதற்கடுத்து மீண்டும் இரண்டாவது முறை அதே போல மோசமாக நடந்து கொண்டார்.
இதன் பிறகு அப்பெண்ணின் தோழி அங்கு வந்த நிலையில் அங்கிருந்து குற்றவாளி தப்பியோடினான். இவையனைத்தும் சிசிடிவியில் பதிவான நிலையில் தற்போது வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உடலில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரின் உயரம் 6.3 ல் இருந்து 6.4 வரை இருக்கும் எனவும் 160 பவுண்ட் எடை கொண்டவராக அவர் இருப்பார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.