பிரான்சில் பச்சிளங்குழந்தைகளை தாக்கிய நபர் யார்? சில தகவல்கள்
பிரான்சில் பச்சிளங்குழந்தைகள் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய நபருக்கும் அதே வயதில் குழந்தை ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது.
குழந்தைகளைக் கத்தியால் குத்திய நபர்
நேற்று, பிரான்சிலுள்ள பிரபல சுற்றுலாத்தலமான Annecy என்னும் ஏரியின் அருகிலுள்ள விளையாட்டுத்திடல் ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை ஒருவர் கத்தியால் குத்தத் துவங்க, சிலர் அவரைத் தடுக்க முயன்றுள்ளார்கள். தடுக்க முயன்ற சிலருக்கும் கத்திக் குத்து விழுந்துள்ளது.
ஆகவே, பொலிசார் அவரை துப்பாக்கியால் சுட்டுத்தான் பிடிக்கமுடிந்துள்ளது.
அந்த நபருடைய பெயர் அப்தல்மாசி (Abdalmasih H, 31) என்றும், அவர் சிரியா நாட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.
Credit: TELEGRAM
எட்டு குழந்தைகள் குத்தப்பட்டதாக நேற்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருந்த நிலையில், இன்று நான்கு குழந்தைகள் தாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர்களில் இரண்டு குழந்தைகள், இரண்டு வயதுடையவர்கள், ஒரு குழந்தைக்கு மூன்று வயது, மற்றொரு குழந்தை 22 மாதக் குழந்தை, அது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
thesun
விடயம் என்னவென்றால், அப்தல்மாசிக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு மகள் இருக்கிறாள். ஸ்வீடன் நாட்டவரான பெண் ஒருவரைத் திருமணம் செய்து, ஸ்வீடனில் அகதி நிலை பெற்றுள்ளார் அப்தல்மாசி.
இந்நிலையில், அவரும் அவரது மனைவியும் எட்டு மாதங்களுக்கு முன் பிரிந்துவிட்டிருக்கிறார்கள்.
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்
அப்தல்மாசி பிரான்சில் புகலிடம் கோரியுள்ளார். ஆனால், நான்கு நாட்களுக்கு முன், அவரது புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது. பிரான்சில் மட்டுமின்றி, சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலியிலும் அவர் புகலிடம் கோரியுள்ளார்.
மூன்று முறை ஸ்வீடனில் குடியுரிமை கோரியும், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், அவர் ஐரோப்பிய தடையில்லா போக்குவரத்து விதிகளின்கீழ் பிரான்ஸ் வந்துள்ளார்.
Credit: AFP
இதற்கிடையில், அவர் ஏற்கனவே ஸ்வீடனில் புகலிடம் பெற்றிருப்பதால், பிரான்சில் அவரது புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gerald Darmanin தெரிவித்துள்ளார்.