10 ஆண்டுகள் பூட்ஸ் கடைகளுக்குள் நுழைய பிரித்தானிய இளைஞருக்கு தடை: ஏன் தெரியுமா?
பிரித்தானியாவில் இளைஞர் ஒருவருக்கு பூட்ஸ் கடைகளுக்குள் நுழைய 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
99 திருட்டுகளை நடத்திய இளைஞர்
பிரித்தானியாவில் லியாம் ஹட்சின்சன் என்ற நிலையான முகவரி இல்லாத 32 வயது இளைஞர் மே 2025 ம் திகதி முதல் ஆகஸ்ட் 2025 வரை லண்டனை சுற்றியுள்ள பல்வேறு பூட்ஸ்(Boots) கடைகளில் 99 திருட்டு சம்பவங்களை நடத்தியுள்ளார்.
அவர் இதுவரை விலையுயர்ந்த மின் சாதனங்கள், சவர கத்திகள் உட்பட சுமார் £107,000 மதிப்புள்ள பொருட்களை திருடியுள்ளார்.
இதனை சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதிப்படுத்திய பொலிஸார் இளைஞரை கைது செய்து வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், குற்றவியல் நடத்தை ஆணை(Criminal Behaviour Order-CBO) ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
பூட்ஸ் கடைகளுக்குள் நுழைய தடை
குற்றவியல் நடத்தை ஆணையின் கீழ் லியாம் ஹட்சின்சன் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிரித்தானியாவில் உள்ள பூட்ஸ் கடைகள் எதற்குள்ளும் நுழைய கூடாது.
மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு லண்டனின் கென்சிங்டன் மற்றும் செல்சியா பகுதிகளுக்குள் நுழையவும் லியாம் ஹட்சின்சனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |