மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் ரயில்வே ஊழியர் ஒருவர், மனைவி மற்றும் அவரது குடும்பத்தால் சித்ரவதை அனுபவித்ததை வீடியோ எடுத்து வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மனைவி குடும்பத்தால் சித்ரவதை
மத்திய பிரதேச மாநிலம் பன்னாவைச் சேர்ந்தவர் லோகேஷ் (30). இவருக்கும் ஹர்ஷிதா (27) என்ற பெண்ணுக்கும் 2023யில் திருமணம் நடந்தது.
சில மாதங்கள் கழித்து மனைவி மற்றும் அவரது குடும்பத்தாரால் லோகேஷ் கொடுமைகளை அனுபவிக்க ஆரம்பித்தார்.
Now the wife reached the ancestral house of the husband in Panna district of MP and saying that she wants to apologise. Can she be trusted now? pic.twitter.com/5xgqHu2wCj
— NCMIndia Council For Men Affairs (@NCMIndiaa) April 2, 2025
மாமியார், மைத்துனர் சேர்ந்து நகை, பணம் கேட்டு சித்ரவதை செய்துள்ளனர். அத்துடன் லோகேஷ் தனது மனைவி, மாமியாரால் தினமும் இரவுகளில் துஷ்பிரயோகமும் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்த அவர், தனது அறையில் ரகசிய கமெரா பொருத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஹர்ஷிதா தனது கணவரை கடுமையாக தாக்கியது பதிவானது.
ஆதாரத்துடன் புகார்
பின்னர் லோகேஷ் தான் அடிவாங்கும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
மேலும் பொலிஸாரிடமும் இதுகுறித்து ஆதாரத்துடன் புகார் அளிக்க, இந்த விடயத்தில் எப்படி நடவடிக்கை எடுப்பது பொலிஸார் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், லோகேஷ் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |