மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை அடித்தே கொன்ற தந்தை: பேஸ்புக் நேரலைக்கு பின் தற்கொலை
உத்தரபிரதேச மாநிலத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை அடித்து கொன்ற நபர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி மற்றும் குழந்தைகள் கொலை
உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் 40 வயது நபர் தனது மகன் மற்றும் இரண்டு குழந்தைகளை அடித்தே கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்திரபால் நிஷாத் (Indrapal nijanth) என்ற நபர் குஜராத்திலுள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரது 38 வயதான மனைவி மற்றும் ப்ரவெஷ்(13) என்ற ஒரு மகனும் ஜான்வி(8) என்ற மகளும் கான்பூரில் வசித்து வந்துள்ளனர்.
@gettyimages
இந்தநிலையில் விடுமுறைக்காக ஊருக்கு வந்த இந்திரபால், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை அடித்து கொலை செய்துள்ளார். இறந்த உடலை மருத்துவர்கள் பரிசோதித்ததில் பலமான காயங்கள் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
மனைவியின் மீது சந்தேகம்
தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொன்ற இந்திரபால், பேஸ்புக் நேரலையில் தனது மனைவி வேறு ஒரு ஆணுடன் தொடர்பிலிருந்தது இந்திரபாலுக்கு தெரியவந்துள்ளது. அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி அவர்களை கொலை செய்ததாக கூறியுள்ளார்.
பின்னர் இந்திர பால் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
@istock
இதனை தொடர்ந்து காவல்துறை இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. மேலும் பேஸ்புக்கில் வெளியான வீடியோவில் நடந்த சம்பவம் உறுதியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
@gettyimages
இந்திரபால் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்கள் மருத்துமனையில் உடல்கூராய்வுக்கு அனுப்பபட்டுள்ளது. கான்பூர் காவல்துறை இது தொடர்பாக கூடுதல் விசாரணை நடத்தும் என தெரிவித்துள்ளது.