வீட்டில் அமர்ந்தே நேரலையில் யாசகம் பெறும் நபர் - நாளொன்றுக்கு 10,000 ரூபாய் வருமானம்
பெரும்பாலும், கோவில்கள் அல்லது பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் வறுமை காரணமாக சிலர் யாசகம் பெறுவார்கள். மக்களும் தங்களால் இயன்றதை அவர்களுக்கு வழங்குவார்கள்.
பிச்சை எடுக்கும் மக்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில், யாசகம் பெறுவது தடை செய்யப்பட்டு, யாசகம் வழங்கினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் நேரலையில் யாசகம்
ஆனால், இளைஞர் ஒருவர் தனது வீட்டில் அமர்ந்து கொண்டே, யூடியூப் நேரலை மூலம், QR ஸ்கேனர் காட்டி, யாசகம் கேட்கிறார்.
இந்தியாவின் டிஜிட்டல் பிச்சைக்காரர் என அறியப்படும் கோவிந்த் சூர்யா என்ற நபர், Govind Surya 360 என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.
4.8 லட்சம் சந்தாதாரர்களுடன் அவர் நடத்தி வரும் யூடியூப் சேனலில் 3,800க்கும் அதிகமான வீடியோக்களைப் பதிவேற்றியுள்ளார்.
நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 மணி நேரம் நேரலையில் வரும் அவர், QR ஸ்கேனர் காட்டி தங்களால் முடிந்த பணத்தை அனுப்புமாறு யாசகம் கேட்கிறார். சொந்த வீடு கட்டுவதற்கு பணம் சேகரிப்பதாக தெரிவித்துள்ளார்.
நேரலையை பார்க்கும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள்,1 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை தங்களால் இயன்றதை வழங்குகிறார்கள்.
நேரலை முடிந்ததும், பணம் அனுப்பியவர்கள் பெயரை குறிப்பிட்டு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிடுகிறார்.
நாள் ஒன்றுக்கு, ரூ.10,000 வரை கூட வருமானம் கிடைத்துள்ளதாக கோவிந்த் சூர்யா தெரிவித்துள்ளார்.
இதன் பின்னணி குறித்து பேசிய அவர், கொரோனா காலத்தில் 3 ஆண்டுகள் வேலை இல்லாமல் வீட்டில் இருந்ததாகவும், ஆனால் என் வயதான தந்தை மிதிவண்டியில் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்புவார்.
அவரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு சங்கடமாக இருந்ததது. இந்த வயதில் அவர் கடுமையாக உழைப்பது வேதனையாக இருந்தது. அதனால் நானும் யாசகம் பெற முடிவெடுத்தேன் என தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் பிச்சைக்காரர் என அவரை விமர்சிக்கும் பலர், உடல் ஆரோக்கியமாக இருக்கும் போது அவர் ஏன் வேலை செய்யாமல் யாசகம் பெறுகிறார் என கேள்வி எழுப்புகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |