பிரித்தானியாவில் வேனில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம்: 39 வயது பெண் கைது
பிரித்தானியாவில் வேன் ஒன்றில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேனில் ஆண் ஒருவரின் சடலம்
கடந்த புதன்கிழமை லெய்செஸ்டரின் கார்டன் தெருவில் வெள்ளை நிற போர்டு டிரான்சிட் வேன் ஒன்றிற்குள் ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தேகத்திற்குரிய வேன் குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சோதனையை முன்னெடுத்தனர்.
மாலை 5.30 மணியளவில் காவல்துறையினர் வேனை திறந்து பார்த்த போது ஆண் ஒருவரின் சடலம் உள்ளே இருப்பது கண்டறியப்பட்டது.

பெண் கைது
இதையடுத்து வேனின் உரிமையாளர் குறித்து விவரங்களை பொலிஸார் தீவிரப்படுத்தினர். இந்நிலையில் ஹவுன்ஸ்லோ பகுதியை சேர்ந்த 39 வயது பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை கொலை குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஹவுன்ஸ்லோவில் உள்ள சட்டன் டீன் பகுதியில் உள்ள வீடு ஒன்றை பொலிஸார் மற்றும் தடய அறிவியல் அதிகாரிகள் சோதனைக்காக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் யாருக்கும் தகவல் அறிந்து இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |