பிரித்தானியாவில் குப்பை தொட்டியில் கிடந்த மனித உடல்: குற்றவாளிக்கு பொலிஸார் வலைவீச்சு
Man body found inside bin in Plymouth Uk: பிரித்தானியாவின் ப்ளைமவுத் நகரில் குப்பை தொட்டியில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குப்பை தொட்டியில் கிடந்த நபர் உயிரிழப்பு
ப்ளைமவுத் நகரில் உள்ள வெஸ்ட் ஹோ(West Hoe) பகுதியில் இன்று காலை 6.30 மணிக்கு நபர் ஒருவரின் கவலைக்கிடமான நிலை குறித்து அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரகால உதவிக்குழுவினர் மற்றும் காவல்துறையினர் குப்பை தொட்டியில் படுகாயங்களுடன் கிடந்த நபரை கண்டுபிடித்து முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர்.

இருந்த போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தை அடுத்து டெவோன் மற்றும் கார்ன்வால் காவல்துறையினர் அப்பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளியை உடனடியாக பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் வீதி வீதியாக விசாரணை செய்து வருகின்றனர். அத்துடன் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.