பிரித்தானியாவில் சிறுவர்கள் இருவரால் கல்லால் அடித்தே கொல்லப்பட்ட இளைஞர்: அதிர்ச்சியில் மீளாத குடும்பம்
பிரித்தானியாவில் ஸ்கேட் பூங்காவில் வைத்து சிறுமிகள் இருவரிடம் இழிவாக பேசியதாக குறிப்பிட்டு இளைஞர் ஒருவரை சிறுவர்கள் இருவர் கல்லால் அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.
சிறுமிகள் இருவரிடம்
ஜாக் எட்வர்ட்ஸ் என்ற 24 வயதான இளைஞர் சிறுமிகள் இருவரிடம் இழிவான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஸ்கேட் பூங்காவில் நடந்த இச்சம்பவத்தை அடுத்து, அந்த இரு சிறுமிகளில் ஒருவர் 13 வயது சிறுவனுக்கு அலைபேசியில் தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து அந்த சிறுவன் நாட்டிங்ஹாமில் உள்ள இரண்டு ஆண்களுடன் பூங்காவிற்குத் திரும்பியுள்ளான். மட்டுமின்றி, 19 வயதான Kai Howitt என்பவரும் இந்த விவகாரம் தொடர்பில் தகவல் அறிந்து அதே புங்காவிற்கு வந்து சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில் ஜாக் எட்வர்ட்ஸ் மற்றும் அந்த சிறுவன் அழைத்து வந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஜாக் எட்வர்ட்ஸ் மீது அந்த குழு கற்கள் உட்பட கையில் கிட்டிய அனைத்தையும் எடுத்து வீசியுள்ளது.
இந்த சம்பவத்தில் Kai Howitt-ம் கலந்து கொண்டுள்ளார். இந்த தாக்குதலில் இருந்து சமாளித்து தப்பிய ஜாக் எட்வர்ட்ஸ் மீது மிக நெருக்கமாக வந்து தாக்கத் தொடங்கியுள்ளனர். ஸ்கேட் பூங்காவில் நடந்த இச்சம்பவத்தன்று தான் ஜாக் எட்வர்ட்ஸ் சிறையில் இருந்து திரும்பியிருந்தார்.
அந்த 13 வயது சிறுவன் உட்பட ஒரு குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் தலையில் பலத்த காயங்களுடன் தப்பிய ஜாக் எட்வர்ட்ஸ், மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால், 2 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின்னர் காயங்கள் காரணமாக மரணமடைந்துள்ளார்.
கல்லால் அடித்துக் கொலை
இதனிடையே அந்த 13 வயது சிறுவன், தாம் இளைஞர் ஒருவரை கல்லால் அடித்தே கொலை செய்துள்ளதாக கூறி தமது நண்பர்களிடம் பெருமை பேசியுள்ளான். அத்துடன், கல்லால் அடித்து ஒருவரை கொலை செய்தால் எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை என்பதையும் இணையத்தில் தேடியுள்ளான்.
இதனிடையே, ஜாக் எட்வர்ட்ஸ் மீது தாக்குதல் நடத்தும் போது முகத்தை மறைத்திருந்த Kai Howitt, அவரது குடியிருப்பில் வைத்து கைது செய்யப்பட்டார். மட்டுமின்றி, தாம் இளைஞர் ஒருவரை கல்லால் அடித்ததை தமது நண்பருக்கும் குறுந்தகவலில் பெருமை பேசியதால் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.
ஆனால் கல்லால் அடித்துக் கொலை செய்த விவகாரத்தில் சிறை செல்ல நேரிடும் என்று Kai Howitt-ஐ நண்பன் ஒருவன் எச்சரித்ததும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.
ஜாக் எட்வர்ட்ஸ் சிறைக்கு சென்று திரும்பியிருந்தாலும், அவரது குடும்பம், ஸ்கேட் பூங்காவில் நடந்த கொலை சம்பவத்தில் நொறுங்கிப் போயுள்ளது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், ஜூலை 15ம் திகதி தீர்ப்பு வெளிவரும் என்றே நீதிமன்றம் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |