ஒற்றை கொய்யா பழத்திற்காக இளைஞர் அடித்து கொலை: நீதி வேண்டும் என சகோதரர் முறையீடு
கொய்யா(guava) பழத்தை எடுத்ததற்காக 20 வயதுடைய இளைஞர் அடித்து கொலை.
ஓம் பிரகாஷை லத்தியால் தாக்கிய இருவர் கைது.
பழத்தோட்டத்தில் கீழே கிடந்த ஒற்றை கொய்யா(guava) பழத்தை எடுத்ததற்காக 20 வயதுடைய இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டத்தில் ஓம் பிரகாஷ்(20) என்ற இளைஞர் காட்டில் பகுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது பழத்தோட்டத்தின் கீழே கிடந்த ஒற்றை கொய்யா பழத்தை கையில் எடுத்துள்ளார்.
அப்போது அதனை கவனித்த பழத்தோட்டத்தின் பாதுகாவலர்கள் இருவர் இளைஞரை மயக்கமடையும் வரை கடுமையாக லத்தியால் தாக்கியுள்ளனர்.
Daily Mirror
பழத்தோட்ட பாதுகாவலர்களிடம் இருந்து தனது சகோதரை காப்பாற்ற காவல் நிலையத்திற்கு விரைந்த பாதிக்கப்பட்டவரின் சகோதரர் சாண்ட் பிரகாஷ், பொலிஸாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.
இதையடுத்து மயக்கமடைந்த நிலையில் இருந்த ஓம் பிரகாசஷை மீட்டு மருத்துவமனையில் பொலிஸார் அனுமதித்தனர், மேலும் ஓம் பிரகாஷை லத்தியால் தாக்கிய இருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓம் பிரகாஷ் லத்தியால் தாக்கப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
Getty
கூடுதல் செய்திகளுக்கு; பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய இலங்கை வீரர்: கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
இந்நிலையில், சகோதரர் ஓம் பிரகாஷ் மரணம் குறித்து பேசிய சாண்ட் பிரகாஷ், அவர்கள் தனது சகோதரை இரக்கமின்றி தாக்கினர், அவன் சுயநினைவை இழக்கும் வரைக்கும் தாக்கியுள்ளனர், அவரது உடம்பில் எண்ண முடியாத அளவிற்கு காயங்கள் உள்ளன, எங்களுக்கு நீதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.