வெறும் 500 ரூபாயில் இருந்து ரூ 5,000 கோடி நிறுவனம்... சிறிய தவறால் ரூ 1400 கோடியை இழந்த தமிழர்
சுமார் 2 லட்சம் முதலீட்டில் ஆரம்பித்த நிறுவனத்தை 25 ஆண்டுகளுக்கு பின்னர் ரூ 5,000 கோடிக்கு விற்ற தமிழர் ஒரே ஒரு முடிவால் 1400 கோடியை இழந்துள்ளார்.
அரசு வேலையை உதறிவிட்டு
கோயம்பத்தூரில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த வேலுமணி, கல்லூரியில் வேதியியலில் பட்டம் பெற்றுவிட்டு, மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வந்தார்.
தைராய்டு பரிசோதனை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுவந்த அவர், அதில் உள்ள தொழில்வாய்ப்புகளை உணர்ந்ததும் தனது மத்திய அரசு வேலையை உதறிவிட்டு, 37வது வயதில் சொந்தமாக நிறுவனம் தொடங்கினார்.
சுமார் 2 லட்சம் முதலீட்டில் தைரோகேர் நிறுவனம் உருவானது. முதலில் மும்பையில் பரிசோதனை ஆய்வகத்தை அமைத்து, அது வெற்றிகரமாக அமைய, அதன் பின்னர் சென்னை, கொல்கத்தா, டெல்லி என விரிவுபடுத்தியுள்ளார் வேலுமணி.
பெரும்பாலான நிறுவனங்கள் தைராய்டு பரிசோதனைக்கு ரூ.600 கட்டணம் வாங்கிய நிலையில், வெறும் ரூ.250-க்கு தைரோகேர் நிறுவனம் பரிசோதனை முன்னெடுத்தது. இது மருத்துவ உலகை திரும்பிப் பார்க்க வைத்தது. மக்கள் மத்தியில் தைரோகேர் பெயர் பிரபலமடையத் தொடங்கியது.
தவறான முடிவு காரணமாக
2016ல் பங்குச்சந்தையில் தைரோகேர் நிறுவனம் பட்டியலிடப்பட்டது. 2019ல் கோவிட் பெருந்தொற்றின் போது, பரிசோதனையில் முன்னின்று செயல்பட்டதால் ரூ.450 என்று இருந்த தைரோகேர் பங்கு மதிப்பு ரூ.1,200 என உயர்ந்தது.
இந்த நிலையில் தைரோகேரை வாங்கும் முடிவுடன் ‘பார்ம்ஈசி’ (PharmEasy) நிறுவனம் வேலுமணியை அணுகியுள்ளது. இறுதியில், ரூ 5,000 கோடிக்கு பார்ம்ஈசி நிறுவனம் தைரோகேரை வாங்கியது.
இதில் ரூ 1500 கோடியை அதே நிறுவனத்திலேயே வேலுமணி முதலீடும் செய்துள்ளார். வேலுமணி முன்னெடுக்கும் முதல் முதலீடு இதுவென்றே கூறப்பட்டது. ஆனால், தவறான முடிவு காரணமாக ரூ 1400 கோடியை இழந்துள்ளார் என்றே சமீபத்தில் வேலுமணி வெளிப்படுத்தியுள்ளார்.
வெற்றிகரமான தொழிலதிபர்கள் கூட முதலீடு செய்வதில் எப்படித் தவறு செய்வார்கள் என்பதை நினைவூட்டுகிறது வேலுமணியின் இந்த இழப்பு. 1982ல் வெறும் 500 ரூபாயுடன் தொடங்கிய அவரது பயணம் 2021ல் ரூ 5000 கோடிக்கு அதிபதியாக மாற்றியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |