கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம்
கடவுளுக்கு பலி கொடுப்பதற்காக உயிரோடு புதைக்கப்பட்ட இளைஞர்
சவப்பெட்டியில் இருந்து தானே வெளியேறி உயிருடன் மீண்ட ஆச்சரியம்
தெற்கு அமெரிக்க நாடான பொலிவியா நாட்டில் இளைஞர் ஒருவர் கடவுளுக்கு பலி கொடுக்கப்படுவதற்காக உயிரோடு புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
30 வயதான விக்டர் ஹுகோ மிகா தென் அமெரிக்காவின் டோபா மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு விழாவில் தன்னை பலி கொடுக்க உயிருடன் புதைத்தார்கள் என கூறுகிறார்.
மேலும் விக்டர் கூறுகையில், நள்ளிரவில் சிறுநீர் கழிக்க எழுந்தபோதுதான் உயிருடன் சவப்பெட்டியில் வைத்து புதைக்கப்பட்டதையே உணர்ந்தேன். பூமித்தாய் திருவிழாவில் கலந்து கொண்ட போது பச்சமாமா தெய்வத்தை வழிபடுவதற்காக பழங்குடியின மக்கள் ஒன்றுகூடியபோது இந்த சம்பவம் நடந்தது.
REUTERS/Gustavo Graf
விழாவில் கலந்து கொண்டு பீர் மது அருந்தலாம் என நண்பர்கள் என்னை அழைத்ததையடுத்து அங்கு சென்றேன். பின்னர் தான் கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்படுவதற்காக என்னை அழைத்தார்கள் என தெரிந்து கொண்டேன்.
நான் என் படுக்கையில் இருப்பதாக நினைத்தேன், சிறுநீர் கழிக்க எழுந்தேன், மேலும் என்னால் நகர முடியவில்லை என்பது மட்டுமே எனக்கு நினைவில் இருக்கிறது. நான் சவப்பெட்டியை உடைத்து பின்னர் மணலை தோண்டி வெளியே வர வேண்டிய கடினமான சூழலுக்கு தள்ளப்பட்டேன்.
Man 'smashes way out of COFFIN after being buried alive "as sacrifice to mother earth"' in Bolivia: After passing out the night in a drinking session at the Mother Earth Festival in El Alto, Bolivia, Víctor Hugo Mica Alvarez, 30, found himself 50 miles… https://t.co/nQzwErNdOm pic.twitter.com/Dbu5LuWdLT
— ??? ??????????? ???? (@SunDispatch) August 11, 2022
பின்னர் அருகில் இருந்த நபரின் உதவியோடு வெளியே வந்து நேராக காவல் நிலையம் சென்றேன் என கூறினார். இருப்பினும் விக்டரின் விசித்திர கதையை பொலிசார் நம்பவில்லை, அவர் குடிபோதையில் பேசுவதாக கூறி வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பியுள்ளனர்.
இதையடுத்தே விக்டர் தனக்கு நேர்ந்த விடயத்தை உள்ளூர் ஊடகங்களிடம் பகிர்ந்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். பத்திரிக்கையாளர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் விக்டர் இரத்தம் வழியும் முகத்துடன் காயத்துடன் காணப்படுகிறார்.
t24.com.tr