ஒரே ஒரு துறையில் முகேஷ் அம்பானிக்கு கடும் சவால் விடும் நபர்... ரத்தன் டாடா இவருக்கு உறவினர்
Trent நிறுவனத்தின் தலைவர் நோயல் டாடா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று, தற்போது இந்தியப் பொருளாதார வட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
10 மடங்கு அதிக வளர்ச்சி
நோயல் டாடா வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களின் நிறுவனம் தற்போதைய நிலையில் இருந்து 10 மடங்கு அதிக வளர்ச்சியை எட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
Trent நிறுவனத்தின் பெரும் ஆதரவைக் குவித்துவரும் Zudio அங்காடிகளே நோயல் டாடாவை அப்படியான ஒரு அறிக்கையை வெளியிட தூண்டியுள்ளது. ஆனால், உண்மையில் அப்படியான ஒரு வளர்ச்சியை எட்டும் நிலையில் Trent நிறுவனம் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நோயல் டாடாவின் கீழ் செயல்படும் இரண்டு முதன்மையான நிறுவனங்கள், ஒன்று Trent, இன்னொன்று டாடா முதலீட்டு நிறுவனம். Trent நிறுவனத்தின் ஒருபகுதியே Landmark நிறுவனம் மற்றும் Westside.
அத்துடன் Tanishq மற்றும் Fastrack ஆகியவையும் நோயல் டாடா தலைமையின் கீழ் செயல்படுபவையே. நோயலின் தாயார் Simone Dunoyer என்பவரால் நிறுவப்பட்ட Trent நிறுவனத்தை 1999 முதல் இவர் முன்னெடுத்து நடத்தி வருகிறார்.
தொடர்ந்து டைட்டன் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வோல்டாஸ் ஆகியவை புதிதாக களம்கண்டது. சசெக்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் பிரான்சில் தொழில் கல்வி என சிறந்து விளங்கிய நோயல் டாடா, சைரஸ் மிஸ்திரியின் சகோதரியான ஆலு மிஸ்திரியை மணந்தார்.
முகேஷ் அம்பானிக்கு கடும் சவால்
ரத்தன் டாடா மற்றும் நோயல் டாடா ஆகிய இருவரும் இருவேறு தாயாருக்கு பிறந்த ஒன்றுவிட்ட சகோதரர்கள். Trent நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு என்பது ரூ 2.4 லட்சம் கோடியாகும்.
அதுவும் Zudio அங்காடிகள் திறக்கப்பட்டதன் பின்னரே சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது. மேலும், ஆகஸ்டு 21 முதல் இந்த நிறுவனத்தின் பங்கள் சுமார் 250 சதவிகித விலை உயர்வை பதிவு செய்துள்ளது.
2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் Trent நிறுவனத்தின் நிகர லாபம் என்பது ரூ 392.6 கோடி என இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டை விடவும் 125 சதவிகித வளர்ச்சி இதுவென கூறுகின்றனர்.
ஆண்டு வருவாய் என்பது ரூ 4,104.4 கோடி எனவும், இது கடந்த ஆண்டை விடவும் 56 சதவிகித வலர்ச்சி என்றும் கூறுகின்றனர். இதனால், சில்லறை வர்த்தகத்தில் முகேஷ் அம்பானிக்கு கடும் சவால் விடும் நிலையில் Trent நிறுவனம் உருவாகியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |