9 நாட்களாக ஹரே கிருஷ்ணா என உச்சரித்து வந்த நபர் - கிருஷ்ண ஜெயந்தியில் மீட்பு
man chanted hare krishna rescued from nepal tunnel on janmasthami: நேபாள பெருவெள்ளத்தில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி 9 நாட்களாக ஹரே கிருஷ்ணா என உச்சரித்து வந்த நிலையில், கிருஷ்ண ஜெயந்தி அன்று மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார்.
9 நாட்களுக்கு பின் சுரங்க தொழிலாளி மீட்பு
சீன மற்றும் நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி, பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 1200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த இந்தியர்கள் உட்பட 5000க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர்.

நேபாள ராணுவம் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா மற்றும் சீனாவின் சுரங்க மீட்பு குழு மீட்பு பணிகளில் உதவி வருகிறது.
வெள்ளப்பெருக்கு நிகழ்ந்து 9 நாட்கள் ஆகி விட்டதால், காணாம;ல் போனவர்களை மீட்க குறைவான சாத்தியம் உள்ளதாகவே கருதப்பட்டது.
ஆனால், திரிசூலி 3A நீர்மின் திட்டத்தில் உள்ள சுரங்கப்பாதையில் இருந்த 2 தொழிலாளர்களை மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டது பலருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் ஒருவர் நேபாள மின்சார ஆணையத்தின் ஊழியரும் மேற்பார்வையாளருமான சஞ்சய் ஷா(வயது 30), மற்றொருவர் நீர்மின் திட்டத்தின் மெக்கானிக்கல் மேற்பார்வையாளர் கபிர் மகார்ஜன்(வயது 45) ஆவர்.
VIDEO | Trishuli, Nepal: Two people rescued alive today from the tunnel of Trishuli–3 'A' Hydropower Project; search for others continues.
— Press Trust of India (@PTI_News) September 4, 2026
(Source: Security Force)
(Full video available on PTI Videos - https://t.co/d8jp61yd2p) pic.twitter.com/gNxbkPrl73
பேரழிவு குறித்த தகவல் கிடைத்ததும், சஞ்சய் ஷா அங்கிருந்தவர்களை மற்றவர்களைத் தப்பிச் செல்லுமாறு எச்சரித்துள்ளார். ஆனால், அவர் தப்பிப்பதற்காகத் திரும்பியபோது, அவருக்கு நேரம் இருக்கவில்லை.
9 நாட்களாக சுரங்கப்பாதைக்குள் இருளில் சிக்கியிருந்த அவர், அருகிலிருந்த 3 அல்லது 4 மற்ற தொழிலாளர்களுடன் பேசியோ அல்லது சத்தம் எழுப்பியோ தொடர்பு கொண்டுள்ளார்.

மேலும், மின் உற்பத்தி நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட, சுரங்கப்பாதையின் உட்பகுதியில் இன்னும் அதிகமானோர் சிக்கியிருக்கக்கூடும்.
அனைவராலும் தப்பித்திருக்க முடிந்திருக்காது. அந்தச் சுரங்கப்பாதை மிகவும் நீளமானது, வெள்ள நீரின் வேகம் அவர்களை மேலும் உள்ளே இழுத்துச் சென்றிருக்கக்கூடும்" என தெரிவித்துள்ளார்.
ஹரே கிருஷ்ணா என உச்சரித்த தொழிலாளி
மேலும், 9 நாட்களாக தான் ஹரே கிருஷ்ணா என்ற மந்திரத்தை உச்சரித்து வந்ததாக தெரிவித்துள்ளார். அவர் கிருஷ்ண ஜெயந்தி அன்று மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார்.
தனது கணவருக்கு இரண்டாவது வாழ்க்கை கிடைத்துள்ளதாக கூறிய அவரது மனைவி, உயிரை பணயம் வைத்து மீட்ட மீட்பு குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
திரிசூலி ஆற்றங்கரையில் உள்ள ஆறு நீர்மின் திட்டங்களுடன் இணைக்கப்பட்ட சுரங்கங்களில் குறைந்தது 900 பேர் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
நேபாளத்தின் சுதந்திர மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்படி, 11 நீர்மின் திட்டங்களில் பணிபுரியும் 600க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
நேபாள இராணுவம் தலைமையிலான பாதுகாப்புப் பிரிவு, சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |