இறந்த பிறகும் 6 குழந்தைகளுக்கு உதவிய 9 வயது சிறுமி: குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் 23 வயது இளைஞர்
பிரித்தானியாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 9 வயது சிறுமியின் உயிர் பறிபோன நிலையில் 23 வயது நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பறிப்போன 9 வயது சிறுமியின் உயிர்
கடந்த ஆண்டு தென்கிழக்கு லண்டனின் பெக்ஸ்லீஹீத்தில்(Bexleyheath) நிகழ்ந்த பேருந்து விபத்தில் 9 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்த நிலையில் 23 வயது நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடா பிகாக்கி(Ada Bicakci) என்ற 9 வயது சிறுமி, வாட்லிங்(Watling) தெருவில் நடந்த இந்த சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 5 ஆம் திகதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் 23 வயது நபர்
இந்த சம்பவத்தில் 23 வயது மார்டின் அசோலோ-அகோகுவா(Martin Asolo-Agogua) என்ற நபர், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்துதல் மற்றும் மது அல்லது போதை மருந்தின் செல்வாக்கின் கீழ் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
மெட்ரோபொலிட்டன் பொலிஸின் கூற்றுப்படி, அவர் சட்டப்பூர்வ வரம்பை மீறி போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனம் ஓட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திலேயே அசோலோ-அகோகுவா கைது செய்யப்பட்டார், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் மார்ச் 24 ஆம் திகதி ப்ரோம்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி அடாவின் ஐந்து வயது சகோதரனும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் நடந்த போது குழந்தைகள் குடும்ப உறுப்பினருடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடாவின் மரணத்திற்குப் பிறகு, ஆறு குழந்தைகளுக்கு உதவும் வகையில் அவரது உறுப்புகள் தானம் செய்யப்பட்டதாக வரது குடும்பத்தினர் ஒரு அறிக்கையை தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |