லண்டன் ரயிலில் நடந்த கோர சம்பவம்... பிரித்தானியர் மீது 10 கொலை முயற்சி வழக்கு
லண்டன் செல்லும் ரயிலில் கத்தியால் தாக்குதலில் ஈடுபட்டதாக 32 வயது பிரித்தானியர் மீது 10 கொலை முயற்சி வழக்குகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொலை முயற்சி
தொடர்புடைய சம்பவம் பயங்கரவாதம் தொடர்பானதாக கருதப்படவில்லை என்று அதிகாரிகள் ஏற்கனவே கூறியிருந்தனர். சனிக்கிழமை ஓடும் ரயிலில் நடந்த கத்திக்குத்தில் 11 பேர் காயமடைந்தனர், அவர்களில் ரயில் பணியாளர் ஒருவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.

லண்டனுக்கு வடக்கே சுமார் 80 மைல் தொலைவில் ஹண்டிங்டனில் நிறித்தப்பட்ட லண்டன் செல்லும் ரயிலில் நடத்தப்பட்ட தாக்குதல் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் மன்னர் சார்லஸ் ஆகியோர் இந்த கோர சம்பவம் தொடர்பில் அறிக்கைகள் வெளியிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கிரவுன் சட்டத்தரணிகள் சேவை வெளியிட்டுள்ள தகவலில், 32 வயதான அந்தோணி வில்லியம்ஸ் என்பவர் மீது 11 கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறியது.

பிற ஆதாரங்கள்
இதில், 10 கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் ரயில் தாக்குதலில் தொடர்புடையவை என்றும், பதினொன்றாவது குற்றச்சாட்டு, அதே நாளில் கிழக்கு லண்டனில் உள்ள ஒரு நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்துடன் தொடர்புடையது என்றும் விளக்கமளித்துள்ளது.

கிழக்கு இங்கிலாந்தின் பீட்டர்பரோவைச் சேர்ந்த வில்லியம்ஸ், திங்கட்கிழமை பிற்பகல் பீட்டர்பரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
ரயிலில் இருந்து சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களை மதிப்பாய்வு செய்த பின்னரே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன என்றும் பொலிஸ் தரப்பில் கூறபப்ட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |