வேல்ஸில் குழந்தை கொலை வழக்கு: இளைஞர் மீது கொலை குற்றச்சாட்டு
வேல்ஸில் குழந்தை கொலை வழக்கில் ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வேல்ஸில் ஐந்து மாத குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தாமஸ் மோர்கன் (28) என்ற நபர், ஸ்வான்சீ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 2025 ஆம் ஆண்டு ஜூலை 11, வெள்ளிக்கிழமை அன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
இவர் ஸ்வான்சீ(Swansea), கோர்சினோனைச்(Gorseinon) சேர்ந்தவர்.
இந்தக் குற்றச்சாட்டு, கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 30 அன்று க்ளைடாக்கில் உயிரிழந்த ஜென்சன்-லீ டூகல் என்ற குழந்தையின் மரணம் தொடர்பானது.
மோர்கன் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று சவுத் வேல்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இவர் 2025 ஆம் ஆண்டு ஜூலை 14, திங்கட்கிழமை அன்று ஸ்வான்சீ கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |