தாயை மார்பில் குத்திக் கொன்ற பிரித்தானியர்... 55 வயது பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்
மெர்சிசைட்டில் கிர்க்பியில் தாயை மார்பில் குத்திக் கொன்ற நபரால் பரபரப்பு.
கரேன் டெம்ப்சேவின் இழப்பிற்கு குடும்பத்தினர் அஞ்சலி
பிரித்தானியாவின் மெர்சிசைட்டில் (Merseyside) கரேன் டெம்ப்சே (55) என்ற பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற அவரது சொந்த மகன் ஜேமி டெம்ப்சே (32) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெர்சிசைட்டில் கிர்க்பியில்(Kirkby) உள்ள பிராம்பிள்ஸ் பப்பிற்கு வெளியே உள்ள கார் பார்க்கிங்கில் திங்கள்கிழமை ஜேமி டெம்ப்சே (Jamie Dempsey) என்ற நபர் தனது தாய் கரேன் டெம்ப்சேவை (Karen Dempsey) மார்பில் பலமாக தாக்கியுள்ளார்.
Credit: Liverpool Echo/Merseyside Police
மார்பில் குத்தப்பட்ட காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கரேன் டெம்ப்சே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தநிலையில் ஜேமி டெம்ப்சே, கரேன் டெம்ப்சேவை உள்நோக்கத்துடன் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு, ஆகஸ்ட் 25 வியாழன் அன்று Merseyside குடும்ப வன்முறை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவ இடத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 38 வயதுடைய நபர் ஒருவரையும் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். ஆனால் ஜேமி டெம்ப்சே தனது தாய் ஜேமி டெம்ப்சே-வை எதற்காக தாக்கினார் போன்ற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து கரேன் டெம்ப்சேவின் பிரிவிற்கு அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன் ரயில் நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்... 15 பேர் கொலை: ஐ.நாவில் ஜெலென்ஸ்கி தகவல்
மேலும் பொலிஸின் விசாரணைகள் மற்றும் அவரது உயிரைக் காப்பாற்ற மிகவும் கடினமாகப் போராடிய அவசர சேவைகளுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.