ஜேர்மன் இளவரசர் என்று கூறி 20 ஆண்டுகளாக ஏமாற்றிவந்த நபர்
தன்னை ஜேர்மன் இளவரசர் என 20 ஆண்டுகளாக கூறிவரும் ஒருவர் உண்மையில் ஒரு ஆசிரியர் என தெரியவந்துள்ளது.
ஜேர்மன் இளவரசர் என ஏமாற்றிவந்த நபர்
இங்கிலாந்திலுள்ள சர்ரேயில் வாழ்ந்துவரும் Dr டொனேட்டஸ் (64) என்பவர், பிரித்தானிய மன்னரான சார்லஸ் சம்பந்தப்பட்ட பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் தொடர்புடையவராக இருந்துவருகிறார்.
அத்துடன், ராஜ குடும்ப நிகழ்வுகள் பலவற்றில் அவர் பங்கேற்றுவந்துள்ளார்.
தன்னை ஜேர்மன் இளவரசர் என்று கூறிக்கொள்ளும் அவர், தன்னை His Serene Highness Dr Donatus, Prince of Hohenzollern என அழைத்துக்கொள்கிறார்.
ஆனால், அவர் உண்மையில் ராஜ குடும்ப உறுப்பினரே அல்ல என ஜேர்மன் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த இளவரசரான கார்ல் பிரெட்ரிக் என்பவர் தற்போது தெரிவித்துள்ளார்.
1961ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்த டொனேட்டஸின் உண்மையான பெயர் Markus Hänsel. அவர் இசை கற்பிக்கும் ஒரு ஆசிரியர்.
அவருக்கு 42 வயது இருக்கும்போது, ஜேர்மன் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த காத்தரினா (Katharina Feodora, Princess of Hohenzollern) என்பவர் டொனேட்டஸை தத்தெடுத்துள்ளார். ஆக, அப்படித்தான் அவர் ராஜ குடும்ப உறுப்பினராகியுள்ளார்.
விடயம் என்னவென்றால், செல்வந்தரான டொனேட்டஸ், பணத்தேவையிலிருந்த காத்தரினாவுக்கு பெரும் தொகை ஒன்றைக் கொடுக்க, அவர் பணத்துக்கான இவரை தத்தெடுத்துகொண்டதாக தெரிவிக்கிறார் உண்மையான இளவரசரான கார்ல்.
இந்நிலையில், இப்படி தன்னை ஜேர்மன் இளவரசர் என்று சொல்லி ஏமாற்றிவரும் டொனேட்டஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சித்துவருவதாக தெரிவித்துள்ளார் இளவரசர் கார்ல்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |