பைக் சாவிக்காக பெற்ற மகனின் கையை கோடரியால் துண்டாக்கிய தந்தை! அடுத்து நிகழ்ந்த சோகம்
இந்திய மாநிலத்தில் பைக் சாவிக்காக நடந்த சண்டையில் தந்தையே மகனின் கையை வெட்டியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் தாமோவைச் சேர்ந்தவர் மோதி படேல்(51). இவரது மகன்கள் ராம் கிசன்(24), சந்தோஷ் படேல்(21).
மோதி படேலும், மூத்த மகன் ராம் கிசனும் வெளியே செல்ல சந்தோஷ் படேலிடம் பைக்கை கேட்டுள்ளனர். ஆனால் பைக்கின் சாவியை கொடுக்க அவர் மறுத்துள்ளார்.
இதனால் இருவரும் சந்தோஷை மோசமாக தாக்கியுள்ளனர். மேலும் ஆத்திரமடைந்த மோதி தனது மகன் என்றும் பாராமல் கோடரியால் சந்தோஷின் கையை வெட்டியுள்ளார்.
இதில் இளைய மகனின் கை துண்டானது. அதனைத் தொடர்ந்து கோடரி மற்றும் மகனின் துண்டான கையுடன் மோதி காவல்நிலையம் சென்று நடந்தவற்றை கூறியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், சந்தோஷை மீட்டு அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
(File)
பின்னர் அவர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மேம்பட்ட சிகிச்சைக்காக ஜபால்பூருக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அதிக ரத்தம் வெளியேறியதால் சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர் மோதி படேல், ராம் கிசன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.