எர்லிங் ஹாலண்டின் மிரள வைத்த கோல்: மான்செஸ்டர் சிட்டி அபார வெற்றி
Man city beat palace by 4-1: பிரீமியர் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி 4-1 என்ற கோல் கணக்கில் பேலஸ் அணியை வீழ்த்தியது.
லண்டனில் நடந்த பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், ஹாலண்ட் இரண்டு கோல்கள் அடிக்க மான்செஸ்டர் சிட்டி 4-1 என்ற கோல் கணக்கில் கிரிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தியது.
எர்லிங் ஹாலண்ட்
லண்டன் Selhurst Park மைதானத்தில் நடந்த பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி மற்றும் கிரிஸ்டல் பேலஸ் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் மான் சிட்டி அணியின் நட்சத்திர வீரரான எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland), உயர பறந்து வந்த பந்தை தலையால் முட்டி அபார கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து 54வது நிமிடத்தில் மற்றொரு மான் சிட்டி வீரரான ரயான் செர்கி, எதிரணியின் தடுப்பை உடைத்து கோல் அடித்தார்.
ரயான் செர்கி
பின்னர் பேலஸ் அணி வீரர் பினோ 56வது நிமிடத்தில் கிக் செய்த பந்தை, மான் சிட்டி கோல் கீப்பர் டொன்னாரும்மா தடுக்க முயன்றபோது, அவரது முதுகில் பட்டு கோல் ஆக மாறியது.

அடுத்த 3 நிமிடங்களில் ரயான் செர்கி (Rayan Cherki) துரிதமாக செயல்பட்டு தனது 2வது கோலினை அடித்தார்.
எர்லிங் ஹாலண்ட் 89வது நிமிடத்தில் மீண்டும் கோல் அடிக்க, மான்செஸ்டர் சிட்டி அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |