மின்சார ரயில் மீது ஏறிய நபருக்கு நேர்ந்த பயங்கரம்
Man climbs onto local train roof, suffers severe burn injuries: மின்சார ரயில் கூரையின் மீது ஏறிய நபருக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தியாவின் மும்பை புறநகர் ரயில் ஒன்றின் மீது ஏறிய நபரை மின்சாரம் தாக்கியது.
மின்சார ரயில் மீது ஏறிய நபர்
செவ்வாய்க்கிழமை மாலை 6.33 மணியளவில், கட்கோபார் ரயில் நிலையத்தில் ஒரு ரயில் வந்து நின்றதும், 30 வயது நபர் ஒருவர் ரயிலின் கூரை மீது ஏறியுள்ளார்.
அப்போது அவரது உடல் மின்சார ஒயர் மீது பட, அவரை மின்சாரம் தாக்கியுள்ளது.

மார்பு, வயிறு மற்றும் கைகளில் கடுமையான தீக்காயங்கள் ஏற்படவே, உடனடியாக மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து பொலிசார் ஒருவரும், பொதுமக்களில் ஒருவரும் ரயில் மீது ஏறி அவரை கீழே இறக்கியுள்ளனர். அந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடலில் 45 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது தலையிலும் காயம் பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் எதற்காக ரயில் மீது ஏறினார் என்பது தெரியாத நிலையில், பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |