லண்டன் பிக் பென் மணிக்கூண்டில் பாலஸ்தீனிய கொடியுடன் ஏறிய நபரால் பரபரப்பு
லண்டன் பிக் பென் மணிக்கூண்டில் பாலஸ்தீனிய கொடியுடன் ஏறிய நபரால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
இன்று, சனிக்கிழமை, மார்ச் மாதம் 8ஆம் திகதி காலை, 7.24 மணியளவில், பிக் பென் கோபுரத்தின் மீது, கையில் பாலஸ்தீன கொடியுடன் ஒருவர் ஏறுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு உருவானது. பரபரப்புக்குக் காரணம், பிக் பென் கோபுரம், பிரித்தானிய நாடாளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையின் வடக்கு முனையில் அமைந்துள்ளது என்பதுதான்.
அந்த நபர், வெறுங்காலுடன், கையில் பாலஸ்தீன கொடியுடன் பிக் பென் கோபுரத்தில் ஏறும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.
BREAKING: A man has climbed the Elizabeth Tower at the Palace of Westminster in London. https://t.co/PAiZ4D1jU3
— Sky News (@SkyNews) March 8, 2025
📺 Sky 501, Virgin 602, Freeview 233 and YouTube pic.twitter.com/MCjbn820rp
அந்த நபரை இன்னமும் அணுகமுடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், அவரை கீழே இறக்கினால்தான், அவர் யார் என்பது குறித்த விவரங்கள் தெரியவரும்.

பிரித்தானியாவில் பாலஸ்தீனியை ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் இதை செய்தால் நடவடிக்கை! பொலிஸாருக்கு பறந்த உத்தரவு
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |