உபர் டாக்ஸியில் ஏறிய பின்னர் ஓட்டுனரை தவறான செயலுக்கு அழைத்த பயணி! பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் உபர் டாக்ஸியில் ஏறிய பின்னர் அதன் ஓட்டுனர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவின் பேக்கர்ஸ்பீல்டை சேர்ந்தவர் அட்ரியோன் ஸ்மார்ட். இவர் உபர் கால்டாக்ஸியை புக் செய்து அதில் பயணம் செய்தார், அப்போது பயணத்தின் போது ஓட்டுனரை தவறான வழிக்கு அழைத்தார், ஆனால் அவர் அதற்கு ஒப்பு கொள்ளவில்லை.
பின்னர் அட்ரியோன் செல்ல வேண்டிய இடம் வந்ததும், கையில் வைத்திருந்த துப்பாக்கியை ஓட்டுனரிடம் காட்டி அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தினார்.
இது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்ட அட்ரியோன் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது,
அவருக்கான தண்டனை விபரம் நவம்பர் 2ஆம் அறிவிக்கப்படவுள்ள நிலையில் 75 ஆண்டுகளில் இருந்து ஆயுள் தண்டனை வரை அவருக்கு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.