என் கண்முன்னாடி பொண்டாட்டி செத்துருவாங்களே! படுக்கை கிடைக்காமல் கதறி அழும் கணவன்! கொரோனாவின் கோரம்
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3.14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இது அமெரிக்காவை விட அதிகமாகும்.
இதனால் மருத்துவமனையில் இடம் கிடைக்காமலும், ஆக்சிஜன் இல்லாமலும் மக்கள் உயிருக்கு போராடி வருகின்றனர், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒரே இடத்தில் போட்டு எரிக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி காண்போரின் கண்களை குளமாக்குகின்றன.
இந்நிலையில் டெல்லியில் மிகப்பெரிய மருத்துவனையான Lok Nayak Jai Prakash மருத்துவமனை வெளியே நீண்ட வரிசையில் மக்கள் சிகிச்சைக்காக காத்துக் கிடக்கின்றனர்.
அவர்களில் தன் மனைவியுடன் வெளியே நின்றிருந்த நபர் ஒருவர் NDTVக்கு அளித்த பேட்டியில், ஏற்கனவே மூன்று மருத்துவமனைகளுக்கு சென்று வந்த போதும், இடமில்லை எனக்கூறி சிகிச்சையளிக்க மறுத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
உங்கள் கால்களில் கூட நான் விழுகிறேன், என் மனைவிக்கு தயவுசெய்து சிகிச்சை கொடுங்கள் என கெஞ்சி பார்த்தும், படுக்கை இல்லை எனக்கூறி நிராகரித்ததாக தெரிவித்துள்ளார்.
என் கண்முன்னே மனைவி இறப்பதை எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்? எனவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கொரோனா நெகடிவ் என ரிசல்ட் வந்த நபர்கள் கூட, மூச்சுவிட சிரமப்படுவதாகவும், அவர்களுக்கும் சிகிச்சையளிக்க வேண்டும் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.