அமெரிக்காவில் தந்தையை சுட்டுக்கொன்ற 2 வயது சிறுவன்! மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 2 வயது சிறுவன் தவறுதலாக தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில், இளைஞனினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதன் பின்னரும் அந்நாட்டில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஜோ பைடன் கைத்துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என கூறினார்.
இந்த நிலையில், புளோரிடா மாகாணத்தில் ரெஜி ராப்ரி - மேரி அயலா தம்பதி தங்கள் வீட்டில் தோட்டாவுடன் கூடிய துப்பாக்கியை load செய்து வைத்துள்ளனர். அதனை எடுத்த அவர்களது 2 வயது மகன் தவறுதலாக தந்தை ரெஜி ராப்ரியை சுட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தபோது ரெஜி மாப்ரிக்கு அவரது மனைவி CPR முதலுதவி அளித்ததை கண்டனர். பின்னர் ரெஜியை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டார்.
முதலில் தன்னை தானே ரெஜி சுட்டுக்கொண்டதாக நினைத்த பொலிஸார், பின்னர் விசாரித்த போது தான் சிறுவன் தவறுதலாக சுட்டது தெரியவந்தது. குறித்த சிறுவனின் தந்தை வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது முதுகில் சுடப்பட்டுள்ளார்.
Photo Credit: Patrick T. Fallon/Agence France-Presse /Getty Images
அதனைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுவனின் பெற்றோர் ஏற்கனவே போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் கைதாகி நன்னடத்தையில் இருந்தது தெரிய வந்தது. மேலும் துப்பாக்கி வைத்திருக்க அவர்கள் அனுமதி பெறவில்லை.
எனவே, ரெஜியின் மனைவி மேரி அயலா மீது கொலைகுற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழப்புகள் ஏற்படுவது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.