திடீரென குறுக்கே வந்த மாடு..வாகனத்தை திருப்பிய இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்
தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர், மாடு குறுக்கே வந்ததில் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக பலியானார்.
டெலிவரி பாய்
திருவண்ணாமலை மாவட்டம் வானாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணியரசன் (33). இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.
சென்னையில் ஒன்லைனில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்த மணியரசன், குடும்பத்துடன் பனப்பாக்கத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் சாலையில் மணியரசன் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார்.
குறுக்கே வந்த மாடு
அப்போது திடீரென குறுக்கே மாடு ஒன்று வந்துள்ளது. இதனால் பதறிய மணியரசன் வாகனத்தை வலது புறமாக திரும்பியுள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக லொறி ஒன்றின் மீது அவரது வாகனம் மோதியது.
இதனால் அவர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
Getty Images/iStockphoto
பரிதாபமாக உயிரிழப்பு
ஆனால் தலை, கை, கால்களில் பலத்த காயம் அடைந்த நிலையில் மணியரசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், மணியரசன் உடலைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் லொறி ஓட்டுநர் ராஜா (43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |