நேற்று ரூ.756 கோடி.. இன்று ரூ.753 கோடி: Kotak Bank வாடிக்கையாளர்களுக்கு தொடரும் இன்ப அதிர்ச்சி
சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்த மருந்து கடை ஊழியரின் கோட்டக் பேங்க் வங்கிக்கணக்கில் திடீரென ரூ.753 கோடி டெபாசிட் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.753 கோடி டெபாசிட்
தேனாம்பேட்டையைச் சேர்ந்த மருந்து கடை ஊழியர் முகமது இத்ரிஸ். இவர் நேற்று, தனது கோடக் மஹிந்திரா பேங்க் வங்கிக்கணக்கில் இருந்து நண்பருக்கு ரூ.2,000 அனுப்பியுள்ளார்.
இதன் பின்னர், இவருக்கு வந்த குறுஞ்செய்தியில் அவரது வங்கி கணக்கில் ரூ.753 கோடி ரூபாய் இருப்பதாக தெரிந்துள்ளது. இதனை பார்த்த முகமது இத்ரிஸ் அதிர்ச்சியடைந்துள்ளார்.
வங்கியில் விளக்கமளிக்கவில்லை
இதனைத்தொடர்ந்து, முகமது இத்ரிஸ் சம்மந்தப்பட்ட வங்கி அதிகாரிகளை போன் மூலம் தொடர்பு கொண்டு இதுபற்றி கூறியுள்ளார். உடனே, வங்கி தரப்பிலிருந்து இவரது வங்கிக்கணக்கை முடக்கியுள்ளனர்.
இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டும், அவர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனால், வங்கி கணக்கை முடக்கியது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
முன்னதாக, சென்னையில் வாடகை கார் ஓட்டிவரும் டிரைவர் ராஜ்குமார் என்பவரின் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடியும், தஞ்சாவூரைச் சேர்ந்த கணேசன் என்பவர் கோட்டக் மஹேந்திரா வங்கிக்கணக்கில் ரூ.756 கோடியும் தவறுதலாக டெபாசிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |