அமெரிக்காவில் குழாய் நீரை பயன்படுத்திய நபர் அதிர்ச்சி மரணம்! தெரிய வந்த உண்மை
அமெரிக்காவில் நபர் ஒருவர் மூக்கை சுத்தம் செய்ய குழாய் நீரைப் பயன்படுத்தியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிர்ச்சி மரணம்
தெற்கு புளோரிடாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மூக்கை சுத்தம் செய்ய குழாய் நீரை பயன்படுத்தியுள்ளார். ஆனால் அவர் தொற்று ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.
அதாவது நீரில் உள்ள அமீபா மூக்கின் வழியாக மூளைக்கு சென்று தாக்கியதில் அவர் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
@KHOU 11/ YouTube video screenshot, Representational image/ Getty Images
மூளை உண்ணும் அமீபா
இது குறித்து சுகாதாரத்துறை தரப்பில் கூறுகையில், இந்த பகுதியில் குழாய் நீர் குடிக்க பாதுகாப்பானது. ஆனால், அமீபா அரிதானது மற்றும் மூக்கு வழியாக மட்டுமே மனிதர்களை பாதிக்கக்கூடியது என தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பொதுவாக வெதுவெதுப்பான நீர் ஏரிகள் மற்றும் நதிகளில் நீச்சல் அடிக்கும் மக்களிடையே, ஒவ்வொரு ஆண்டும் மூளை உண்ணும் அமீபாவால் சில மரணங்கள் நிகழ்கின்றன.
Naegleria fowleri என்பது ஆபத்தான அமீபாவாக அறிப்படுகிறது. அது தொற்றினால் 97 சதவீத மக்கள் இறந்துவிடுவார்கள். ஒரு சிலர் மட்டுமே தப்பியுள்ளனர்.
இந்த அமீபா மூளைக்காய்ச்சல் நோயை உண்டாக்குகிறது. இதற்கு அறியப்பட்ட சிகிச்சைகள் எதுவும் இல்லை.