பூங்காவில் பொலிஸாருடன் துப்பாக்கி சண்டை: இறுதியில் தன்னை தானே மாய்த்துக் கொண்ட சோகம்!
ஜார்ஜியாவில் ஸ்டோன் மவுண்டன் பூங்காவில் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்ட நபர், இறுதியில் தன் உயிரை தானே மாய்த்துக் கொண்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜார்ஜியாவில் சோகம்
ஜனவரி 16, 2025 அன்று மாலை, ஜார்ஜியாவின் ஸ்டோன் மவுண்டன் பூங்காவில்(Stone Mountain Park) ஒரு துயரகரமான சம்பவம் நடந்தது.
அடையாளம் தெரியாத ஒரு நபர் பூங்காவிற்குள் பல தடவை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் அவர் சட்ட அமலாக்கு அதிகாரிகளுடன் சண்டையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
சட்ட அமலாக்கு அதிகாரிகளுடன் நடந்த மோதலின் போது, அந்த நபர் அதிகாரி ஒருவரிடம் தன்னை சுட்டுவார்களா என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அதிகாரியிடம் இருந்து இல்லை என்ற பதிலைப் பெற்ற பின்னர், தாக்குதல் நபர் துயரகரமாக தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார்.
சம்பவத்தின் போது ஆறு தடவை துப்பாக்கிச் சூடு நடந்ததாக சாட்சிகள் தெரிவித்தனர். அந்த நபரின் செயல்களுக்கான காரணம் மற்றும் பொலிஸாருடன் நடந்த மோதலைத் தவிர வேறு எந்தவொரு ஈடுபாடு இருந்ததா என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜார்ஜியா புலனாய்வுப் பிரிவு இது தொடர்பான விசாரணையில் ஈடுபட்டுள்ளது, இந்த சம்பவத்தின் போது வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |