கோவிலில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த நபர்: சில நிமிடங்களில் காத்திருந்த அதிர்ச்சி
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் கோவிலில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரார்த்தனை செய்த நபர்
மத்திய பிரதேச மாநிலத்தில் மருந்தகக் கடை ஒன்றை நடத்தி வரும் ராஜேஷ் மெஹானி என்பவர் தீவிர சாய் பக்தர் ஆவார்.
இவர் கட்னியில் உள்ள கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்றிருந்தார். அங்கு இருந்த சிலை முன் அமர்ந்து மெஹானி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.
கண்ணை மூடி அமர்ந்திருந்த அவர் 15 நிமிடங்களுக்கு எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அருகில் இருந்த பக்தர்கள் பூசாரியை அழைத்தனர்.
மெஹானியிடம் இருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. இதனால் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
#NDTVBeeps | Man Dies Of Heart Attack During Puja At Madhya Pradesh Temple pic.twitter.com/1KJsTsFz4m
— NDTV (@ndtv) December 4, 2022
மாரடைப்பால் மரணம்
மருத்துவர்கள் அவரை பரிசோதித்த பின் ஏற்கனவே மெஹானி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அமைதியான மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீவிர மார்பு வலி, அழுத்தம், திடீர் மூச்சுத் திணறல் மற்றும் தலைச்சுற்றல் போன்றவை இந்த மாதிரியான மாரடைப்பின் அறிகுறிகள் என்று விவரிக்கப்படுகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.