கனடாவுக்கு அனுப்புவதாக பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிய பெண் தலைமறைவு
கனடாவில் வேலை வாங்கித் தருவதாக 4 லட்ச ரூபாய்க்கும் அதிகம் பணம் எற்றுக்கொண்டு ஏமாற்றிய பெண்ணொருவர் தலைமறைவாகிவிட்டார்.
கனடாவில் வேலை என ஏமாற்றிய பெண்
இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த ராஜேஷ் பட்டேல் என்பவர், கனடாவில் வேலை கிடைக்குமா என இணையத்தில் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, பிரீத்தி சௌகான் என்னும் பெண் ராஜேஷை தொடர்புகொண்டு, தன்னை வெளிநாட்டு வேலை பெற்றுத் தரும் ஏஜண்ட் என அறிமுகம் செய்துகொண்டுள்ளார்.
தன்னிடம் அதிக பணம் இல்லை என ராஜேஷ் முதலிலேயே கூற, நீங்கள் முன்கூட்டியே பணம் எதுவும் செலுத்தவேண்டியிருக்காது என பிரீத்தி உறுதியளிக்க, விசாவுக்கு விண்ணப்பிக்க சம்மதித்துள்ளார் ராஜேஷ்.
ராஜேஷின் ஆவணங்களைப் பெற்றுக்கொண்ட பின் ராஜேஷுக்கு கனடாவில் வேலைக்கான ஒரு அழைப்பு வந்துள்ளதாகக் கூறி நேர்காணலுக்கும் ஏற்பாடு செய்துள்ளார் பிரீத்தி.
அதைத் தொடர்ந்து, ஆவணங்கள் சரிபார்த்தலுக்கு பணம் செலுத்தவேண்டும் என்று கூறி, 7,600 ரூபாய் வாங்கியுள்ளார் பிரீத்தி.
அதற்குப் பின், ஒரு முறை தூதரகக் கட்டணம் என 28,500 ரூபாய், விசா பரிசீலனைக்காக 76,000 ரூபாய் என மொத்தம் 4. 25 லட்ச ரூபாய் செலுத்தியுள்ளார் ராஜேஷ்.
அடுத்து ஆகத்து மாதம் பயோமெட்ரிக் ஆய்வுக்கு தயாராக இருங்கள் என்று பிரீத்தி கூற, காத்திருந்த ராஜேஷுக்கு அழைப்பு வரவேயில்லை.

ஆகவே, ராஜேஷ் பிரீத்தியை மொபைலில் தொடர்புகொள்ள முயல, அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்திருக்கிறது.
தொடர்ந்து அவரைத் தொடர்புகொள்ளும் முயற்சிகள் தோல்வியடையவே, பொலிசில் புகார் செய்துள்ளார் ராஜேஷ்.
ஆனால், பிரீத்தியும், அவருடைய கூட்டாளிகளும் தலைமறைவாகிவிட்டார்கள். பொலிசார் அவர்களை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |