நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்... நீதிபதிக்கு ஐஸ் வைத்த கொள்ளையன்: அழகான பெண் நீதிபதி கொடுத்த பதில்
அமெரிக்காவில் கொள்ளையன் ஒருவன் காணொலிக்காட்சி மூலம் நீதிபதி முன் ஆஜராகும்போது, நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என நீதிபதிக்கே ஐஸ் வைத்த சம்பவம் தலைப்புச் செய்தியாகியுள்ளது.
ப்ளோரிடாவைச் சேர்ந்த Demetrius Lewis வீடு ஒன்றிற்குள் நுழைய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு காணொலிக்காட்சி மூலம் நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்டான்.
நீதிபதியான Tabitha Blackmon வழக்கை விசாரிக்க, அவரைக் கண்டதும், நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், நான் கண்டிப்பாக இதைச் சொல்லித்தான் ஆகவேண்டும், நீங்கள் மிகவும் அழகு என்று கூறி நீதிபதிக்கு ஐஸ் வைக்க முயன்றுள்ளான் Demetrius.
தொடர்ந்து, நீதிபதிக்கே ’ஐ லவ் யூ’ கூட சொல்ல முயற்சித்துள்ளான் அவன்.நீதிபதியான Tabithaவுக்கே அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் நாணம் வந்துவிட்டதை வீடியோவில் காணமுடிகிறது.
ஆனால், ஓகே, மிஸ்டர் Lewis, உங்கள் ஐஸ் வேறு எங்கேயாவது உங்களுக்கு உதவலாம், ஆனால், அந்த வேலையெல்லாம் என்னிடம் நடக்காது என்று கூறிவிட்டார் நீதிபதியான Tabitha.அத்துடன், Lewisஐ சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டு விட்டார் அவர்.
Lewis, நீதிபதிக்கு ஐஸ் வைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது, ஒரு மில்லியனுக்கும் அதிகமான முறை அந்த வீடியோ பார்வையிடப்பட்டுள்ளது.
வேடிக்கை என்னவென்றால், வீடியோவைப் பார்த்த பலரும், ஆமாம், Lewis சொன்னது போலவே, உண்மையாகவே நீதிபதி Tabitha மிகவும் அழகாகத்தான் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்கள்.