விமான எஞ்ஜினுக்குள் இழுக்கப்பட்டு உயிரிழந்த நபர்! ஐரோப்பிய நாட்டில் அதிர்ச்சி சம்பவம்
இத்தாலியில் 35 வயது நபர் ஒருவர் விமான எஞ்ஜினுக்குள் இழுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாதுகாப்புக் கதவைத் திறந்து
பெர்கமோ-ஓரியோ அல் செரியோ விமான நிலையத்தில் வோலோடியா நிறுவனத்தின் விமானம் ஸ்பெயினுக்கு செல்ல ஓடுதளத்தில் தயாராக இருந்தது.
அப்போது ஆண்ட்ரியா ருஸ்ஸோ (35) என்ற நபர், விமான நிறுத்துமிடத்திற்கு நேரடியாக செல்லும் பாதுகாப்புக் கதவைத் திறந்து ஓடினார்.
அவரைப் பிடிக்க பணியாளர்கள் முயன்றபோது, வேகமாக விமானத்தை நோக்கி ஓடிய ருஸ்ஸோ விமான எஞ்ஜின் மீது ஏற முயன்றார்.
உயிரிழந்த நபர்
ஆனால் சறுக்கி விழுந்த அவர் மற்றோரு எஞ்ஜின் அருகே சென்றபோது உள்ளிழுக்கப்பட்டதில் படுகாயமடைந்து, அங்கேயே விழுந்து உயிரிழந்தார்.
காரை வேகமாக ஓட்டி வந்த அந்த நபர், பொலிசாரிடம் பிடிபடாமல் இருக்க தாறுமாறாக ஓடியதில் இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 8ஆம் திகதி நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |