குளிர்பானம் வாங்க காசில்லாமல் இருந்த நபர்; லொட்டரியில் கிடைத்த ரூ.9.48 கோடி
man found 1 million lottery won when money shortage for buy cooldrinks: குளிர்பானம் வாங்க காசில்லாமலிருந்த போது, லொட்டரி டிக்கெட்டை பரிசோதித்ததில் 2 மாதங்களுக்கு முன்பு வாங்கிய டிக்கெட்டிற்கு ரூ.9.48 கோடி பரிசு கிடைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
குளிர்பானம் வாங்க காசில்லாமல் இருந்த நபர்
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தின் வயோமிங் நகரைச் சேர்ந்த மைக்கேல் வாண்டர் லுக்ட், குளிர்பானம் வாங்குவதற்காக ஒரு மளிகைக் கடைக்கு சென்றுள்ளார்.
குளிர்பானம் வாங்க கையில் பணமில்லாத நிலையில், தனது கடன் அட்டையை பயன்படுத்துவதற்கு பதிலாக தனது பணப்பையிலிருந்த பிக்பால் லொட்டரி டிக்கெட்களில் சில டொலர்கள் வென்றிருக்கலாம் என நினைத்து அதை காசாளரிடம் வழங்கியுள்ளார்.
காசாளர் அந்த டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்தபோது, லொட்டரி அலுவலகத்தில் உரிமை கோரல் பதிவு செய்யுமாறு கேட்கும் ஒரு செய்தியுடன் ஒன்று வந்திருப்பதைக் கண்டார்.
2 மாதம் முன்லொட்டரியில் வென்ற ரூ.9.48 கோடி
அதன் பின்னர் வான்டர் லுக்ட் தனது லொட்டரி டிக்கெட்களின் வெற்றி எண்களைச் சரிபார்த்த போது, ஆகஸ்ட் 8 ஆம் திகதி குலுக்கலில் தான்வாங்கிய டிக்கெட்டில் 5 பந்துகளை சரியாக பொருத்தி 1 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.9.48 கோடி) பரிசு வென்றதை கண்டறிந்துள்ளார்.

1 மில்லியன் டொலர் பரிசு வென்றது தெரியாமல் 2 மாதங்களாக அந்த லொட்டரி டிக்கெட்டை தன்னுடன் வைத்திருந்துள்ளார்.
அதன்பிறகு, வான்டர் லுக்ட் மிச்சிகன் லாட்டரி தலைமையகத்தில் தனது 1 மில்லியன் டொலர் பரிசைப் பெற்றுக்கொண்டார்.
அந்தப் பணத்தை தனது வீட்டுக் கடனை அடைப்பதற்கும், மீதமுள்ள தொகையை முதலீடு செய்வதற்கும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.